News
முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில், (30.7.2026) சென்னையிலுள்ள வழிகாட்டி நிறுவனத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன
Published : Jul 30, 2026 02:58:48 PM - 2 months ago
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில், 30.7.2026) சென்னையிலுள்ள வழிகாட்டி நிறுவனத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சப் (Chubb) நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த நார்டெக்ஸ் (Nordex) நிறுவனம், மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த மோட்டிவ்லிங்க் (MotiveLink) நிறுவனம் ஆகிய நிறுவனங்களுக்குமிடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres - GCC), ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையங்கள், உற்பத்தித் துறை மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய இந்த முதலீடுகள் வாயிலாக, தமிழ்நாட்டில் 2,920-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.