News
திராவிடர் கழகப் பரப்புரைப் பயணம் ‘நீட், இ.டபிள்யூ.எஸ் ஒழிப்போம்’: - பெரியார் திடலில் போலீஸ் குவிப்பு
Published : Jul 30, 2026 11:35:12 AM - Yesterday
‘NEET-EWS ஒழிப்போம்! சமூகநீதி காப்போம்!’ என்ற முழக்கத்தோடு திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை சார்பில் இன்று இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில, சென்னை பெரியார் திடலில் முன்னெச்சரிக்கையாகப் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த இந்த இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகத் திராவிடர் கழகத் தலைமை அறிவித்துள்ளது.
