முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் சென்னை மெட்ரோ இரயில் திட்டங்களின் நிலை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
Published : Jul 30, 2026 10:06:13 AM - 2 days ago
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சென்னை மெட்ரோ இரயில் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
(29.7.2026) சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் சுட்டம்-I மற்றும் கட்டம்-|| பணிகளின் முன்னேற்றம். முக்கிய கட்டுமாணப் பணிகள், இரயில்களை இயக்குவதற்கான தயார்நிலை மற்றும் எதிர்காய மெட்ரோ திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். மேலும், மெட்ரோ இரயில்கள் இயங்கும் இடங்கள் மற்றும் கட்டுமானம் நடைபெறும் முக்கியப் பகுதிகளுக்கு நேரில் சென்று, சென்னை மெட்ரோ இரயில் விரிவாக்கப் பணிகளையும் ஆய்வு செய்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து நந்தனம் மெட்ரோ இரயில் நிலையம் வரை மெட்ரோ இரயிலில் பயணம் செய்து தனது ஆய்வைத் தொடங்கினார். நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான "மெட்ரோஸ்" கட்டடத்திலுள்ள இயக்கக் கட்டுப்பாட்டு மையத்தைப் (Operation Control Centre) பார்வையிட்டு. மெட்ரோ இரயில்களின் இயக்கத்தைக் கண்காணித்தல் மற்றும் நிர்வகித்தல் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-1 மற்றும் 1-ன் பணிகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும், எதிர்கால விரிவாக்கப் பணிகள் மற்றும் அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கேட்டறிந்து. அலுவவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார். மேலும், பயணிகள் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து தங்கள் பயணத்தின் இறுதி இடத்தினைச் சென்றடைவதற்கு (Last Mile Connectivity) ஏற்படுத்தப்பட்டுள்ள இதர போக்குவரத்து வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் 5-வது வழித்தடத்திற்குட்பட்ட கத்திப்பாரா பகுதியை பார்வையிட்டுத் தனது ஆய்வைத் தொடர்ந்தார். அங்கு நடைபெற்று வரும் 'சமச்சீர் ஒற்றைத்தாங்கி' (Balanced Cartilever) மேம்பவக் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு, அதன் கட்டுமான முறை மற்றும் பணிகளின்
1
வாய்மையே வெல்லும்
முன்னேற்றம் குறித்துக் கேட்டறிந்தார். நிலத்திலிருந்து எந்தவிதத் தூண் தாங்குதலும் இன்றி இக்கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. துல்லியமான திட்டமிடல் மற்றும் தீவிர பாதுகாப்பு நடைமுறைகள் மூலம், முதற்கட்ட மெட்ரோ இரயில் போக்குவரத்திற்கும். சாலைப் போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறுமின்றி இப்பணிகள் சவாலாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், இந்த ஆய்வைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-II. வழித்தடம் 4-ல் அமைந்துள்ள போரூர் புறவழிச்சாலை மெட்ரோ இரயில் நிலையத்தினை ஆய்வு செய்து, அங்கிருந்து பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ இரயில் நிலையம் வரையிலும் பின்னர், பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து போரூர் புறவழிச்சாலை மெட்ரோ இரயில் நிலையம் வரையிலும் ஓட்டுநர் இல்லாமல் தானியங்கி முறையில் (Unattended Train Operation UTO) இயக்கப்படும் மெட்ரோ இரயிலில் பயணம் செய்து சோதனை ஓட்டத்தைப் பார்வையிட்டதுடன், விரைவில் திறக்கப்படவுள்ள புதிய வழித்தடத்தின் செயல்பாட்டு ஆயத்தப் பணிகளையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.நெ. மரிய வில்சன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.எம்.ஹரிஷ், திரு ரேவந்த் சரண், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார். இ.ஆ.ப. கூடுதல் தலைமைச் செயலாளர் / சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. மு.அ. சித்திக், இ.ஆ.ப, சுற்றுலா, பண்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் சீ. ஸ்வர்ணா. இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
