மது பாட்டில்லுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க மாட்டோம் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவித்திருக்கிறது
Published : Jul 29, 2026 06:09:36 PM - 3 months ago
மது பாட்டில்லுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க மாட்டோம் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவித்திருக்கிறது மது பாட்டில் விலைக்கே இனி மது விற்பனை செய்யப்படும் எனவும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது எனவும் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவித்திருக்கிறது.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பழனி பாரதி மற்றும் நிர்வாகிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு துறை அமைச்சரை சந்தித்தனர் அப்போது பணி நிரந்தரம் உள்ளிட்ட நீண்டகால கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்
செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் தலைவர் பழனி பாரதி டாஸ்மாக் கடைகளில் இனி அதிகபட்ச சில்லறை விலையை விட ஒரு ரூபாய் கூட கூடுதலாக வசூலிக்கக் கூடாது என்ற அரசின் அறிவுறுத்தலுக்கு ஆதரவு கொடுத்தோம்
இதுவரை கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டதற்கு காரணமாக இருந்த நடைமுறைச் செலவுகள் குறித்தும் அமைச்சரிடம் விளக்கமளித்திருக்கிறோம்
சரக்கு இறக்கும் கூலி போக்குவரத்தின் போது உடையும் மதுபாட்டில்களால் ஏற்படும் இழப்பு காலி பாட்டில்களை கையாளும் செலவு லேபிள் ஒட்டுதல் இரவு நேர பாதுகாப்புக்கான காவலாளி செலவு உள்ளிட்ட நிர்வாகச் செலவுகளை அரசே ஏற்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.
இந்த கோரிக்கைகள் குறித்து அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்
காலி பாட்டில்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் தீர்வு காணப்படும் என்றும் சரக்கு போக்குவரத்து மற்றும் லோடிங் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
