காவிரி விவகாரத்தில் பெங்களூரு வுக்கு செல்வதைவிட முதல்வர் விஜய் டெல்லிக்கு செல்ல வேண்டும் என முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரி வித்தார்.
Published : Jul 29, 2026 02:16:12 PM - 2 days ago
காவிரி விவகாரத்தில் பெங்களூரு வுக்கு செல்வதைவிட முதல்வர் விஜய் டெல்லிக்கு செல்ல வேண்டும் என முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரி வித்தார்.
காவிரி விவகாரம் தொடர்பாக திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் காட்பாடியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று செய்தி யாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ‘‘காவிரி மேகேதாட்டு விவகாரத்தில் ஜல் சக்தி துறை அமைச்சரின் பதில் அபத்தமான ஒரு ஆபத்தான அறிக்கையை கூறியிருக்கிறார்.
கடந்த 2018 தீர்ப்பில் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி ஒப்புதலை பெற வேண்டிய அவசியம் இல்லை என கூறியிருக்கிறார்.
இது என்ன ஆபத்து என்றால் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் அங்கேயோ, இங்கேயோ எல்லாம் கழித்து விட்டு ஒரு சின்ன தகவலை எடுத்து பேசுகிறார். அமைச்சருக்கு காவிரி விவகாரம் குறித்து அனைத்தும் தெரியாது என்று சொல்ல முடியாது.