151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை இன்று மாலைக்குள் மத்திய அரசிடம் ஒப்படைக்க: தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
Published : Jul 29, 2026 11:46:31 AM - 5 days ago
151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை இன்று மாலைக்குள் மத்திய அரசிடம் ஒப்படைக்க: தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடஒதுக்கீடு விவகாரத்தில், காலியாக உள்ள 151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களை இன்று மாலைக்குள் மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு ஒப்படைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான 2025-26ம் கல்வியாண்டு கலந்தாய்வில் அரசுப்பணியில் உள்ள மருத்துவர்களுக்கான மாநில ஒதுக்கீட்டு இடங்கள் தற்போது வரையில் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இந்நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு திருப்பி அளித்து, அதன்மூலம் தகுதிப் பட்டியலின் அடிப்படையில் அடுத்தக்கட்ட கலந்தாய்வை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழகத்தை சேர்ந்த தமிழ்வாணி என்பவர் உள்பட மருத்துவ மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது
அப்போது நீதிபதிகள், ”தமிழ்நாட்டில் காலியாக உள்ள 151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு இடங்களை நாளை (இன்று) மாலைக்குள் மத்திய அரசிடம், தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும். குறிப்பாக மாநில ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் வீணாகும் இந்த இடங்களை அகில இந்திய தகுதிப் பட்டியல் மூலம் நிரப்பும் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது’’ என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். இதற்கு தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் மருத்துவ சங்கத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அவர்களது கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்
