News
2026-27ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் வேளாண்துறை அமைச்சர் வினோத் தலைமையில் மற்றும் 10 அமைச்சர்கள் வேளாண்துறை சார்ந்தவர்கள் முன்னிலையில் கருத்துக்கேட்பு கூட்டம்
Published : Jul 28, 2026 11:16:31 AM - 6 days ago
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் திரு. என். ஆனந்த், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே. ஏ. செங்கோட்டையன், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப. வெங்கடரமணன், மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு. ம. விஜய் பாலாஜி, மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. வ. காந்திராஜ், மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ஆர். வினோத், மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திருமதி சி. விஜயலட்சுமி, மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. பெ. மதன் ராஜா, மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் திரு. ஆ. ஸ்ரீநாத், மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திருமதி எஸ். கமலி, மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு. ஆர். வி. ரஞ்சித் குமார், மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மருத்துவர் வே.க. ராஜீவ் ஆகியோர் முன்னிலையில் (27.07.2026) சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலக மாநாட்டு கூட்டரங்கில், 2026-2027-ஆம் ஆண்டுக்கான வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை செயலாளர்/ வேளாண் உற்பத்தி ஆணையர் முனைவர் பொ.சங்கர், இ.ஆ.ப., அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், செயலாளர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
