News
முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை காவேரி குழும மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர் சந்திப்பு
Published : Jul 27, 2026 02:53:32 PM - 3 months ago
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை (27.07.2026) தலைமைச் செயலகத்தில், காவேரி குழும மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர் டாக்டர் எஸ். சந்திரகுமார், நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ். மணிவண்ணன், செயல் இயக்குநர் (திட்டங்கள் மற்றும் கொள்முதல்) திரு பி. செல்வராஜு ஆகியோர் சந்தித்து “நலம் தமிழ்நாடு” திட்டத்திற்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை (27.07.2026) தலைமைச் செயலகத்தில், பனிமலர் பொறியியல் கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் டாக்டர் பி.சின்னதுரை, இயக்குநர்கள் டாக்டர் சி.சக்திகுமார் மற்றும் டாக்டர் சரண்யாஸ்ரீ சக்திகுமார் ஆகியோர் சந்தித்து, “நலம் தமிழ்நாடு” திட்டத்திற்கு 1 கோடி ரூபாய்க்கான வங்கி வரைவோலையை வழங்கினார்கள்.
