பாளையங்கோட்டை சிறையில் தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் உடன் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சந்திப்பு
Published : Jul 27, 2026 02:50:02 PM - 7 days ago
பாளையங்கோட்டை சிறையில் தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சந்தித்துப் பேசினார். முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை பாளையங்கோட்டை சிறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சந்தித்து பேசினார்.
சர்வாதிகார #SofaModel அரசால் பழிவாங்கும் நோக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ள கழக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மார்க்கண்டேயன் அவர்களை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று சந்தித்தோம்.
சிறையில் இருந்தாலும் முன்பை விட இன்னும் வேகமாக கழகப்பணி - மக்கள் பணியாற்றிடும் உத்வேகத்துடன் உள்ள அண்ணன் மார்க்கண்டேயன் அவர்களிடம் நலம் விசாரித்தோம்.
அவரின் விடுதலைக்காக
திமுக தலைவர் முக ஸ்டாலின்
அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழக வழக்கறிஞர்கள் மேற்கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகளை எடுத்துக்கூறி ஆறுதல் தெரிவித்தோம்.
மிசா - எமர்ஜன்சியை பார்த்தது தி.மு.கழகம். தத்தித்தாவி ஆட்சிக்கு வந்து தறிகெட்டு அரசு நடத்தும் #Sofa அரசின் கைது நடவடிக்கைகளுக்கு எல்லாம் கழகத்தின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார்கள்.
விமர்சனத்துக்காக செய்யப்படும் ஒவ்வொரு கைதின்போதும் நீதிமன்றத்திடம் குட்டுப்படும் இந்த ஆட்சியாளர்கள், மக்கள் மன்றத்திலும் சரிவைச் சந்திப்பது உறுதி. என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன் x தளத்தில் தெரிவித்துள்ளார்
