“தி.மு.க.,வை வழி நடத்த, கனிமொழி, உதயநிதி இருவரில் யாருக்கு தகுதி உள்ளது என,- அக்கட்சி நிர்வாகிகளிடம் ஓட்டெடுப்பு நடத்த தயாரா,” என, அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பி உள்ளார்
Published : Jul 27, 2026 10:36:00 AM - 4 days ago
“தி.மு.க.,வை வழி நடத்த, கனிமொழி, உதயநிதி இருவரில் யாருக்கு தகுதி உள்ளது என,- அக்கட்சி நிர்வாகிகளிடம் ஓட்டெடுப்பு நடத்த தயாரா,” என, அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பி உள்ளார்
திருச்சியில் அமைச்சர் நிர்மல் குமார் பேசிய போது , "நாடு முழுவதும் இளைஞர்களின் போராட்டம் நடந்து வருகிறது. இங்கும் நீட் தேர்வை சீரமைக்க வேண்டும் என்று ஒரு சிலரும், நீட் தேர்வே வேண்டாம் என்று ஒரு சிலரும் போராட்டம் நடத்துகின்றனர்.
இதனிடையே, திமுகவின் தேவையில்லாத வேலையைப் பார்த்து வருகின்றனர். ஜென் ஸீ திமுக என்ற டீ-சர்ட்டை அணிந்துகொண்டு, ரூ.200 கொடுத்து போராட்டக்காரர்களுக்கு மத்தியில் ஒரு சிலரை உதயநிதியோ யாரோ அனுப்புகின்றனர்.
உதயநிதியை யாரோ தவறாக வழிநடத்துகின்றனர். முதலில் ஜென் ஸீ என்றால் என்ன? என்பதை உதயநிதிக்கு யாரேனும் சொல்லி புரிய வைக்க வேண்டும்.
திமுகவை வழிநடத்துவதற்கு உதயநிதிக்கு தகுதி உள்ளதா? அல்லது கனிமொழிக்கு தகுதி உள்ளதா? என அவர்களின் கட்சியினரிடம் ஒரு வாக்கெடுப்பு நடத்தச் சொல்வோம். அந்த வாக்கெடுப்பின் முடிவுகளைக்கூட உதயநிதி வெளியில் சொல்ல வேண்டாம். ஏனெனில், அவரின் தகுதியை அவர்களின் கட்சியினருக்கே தெரியும்" என்று தெரிவித்தார்
