பேசிய பிரதமர் மோடி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் “நண்பர்களே உங்களுக்கு எனது நன்றிகள். நேற்று இரவில் உங்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் பதிவிட்ட வீடியோவுக்கு நீங்கள் பதிலளித்த விதமும், அளித்த நேர்மறையான ஆலோசனைகளும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
Published : Jul 25, 2026 11:33:43 AM - a week ago
பேசிய பிரதமர் மோடி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் “நண்பர்களே உங்களுக்கு எனது நன்றிகள். நேற்று இரவில் உங்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் பதிவிட்ட வீடியோவுக்கு நீங்கள் பதிலளித்த விதமும், அளித்த நேர்மறையான ஆலோசனைகளும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் அன்பு தொடர்ந்து நீடிக்கும், நமது பிணைப்பு இன்னும் வலுவடையும். உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்களையும் லைக்ஸ்களையும் பெற்று சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்னதாக, வியாழக்கிழமை இரவு வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்ட பிரதமர் மோடி, நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு சம்பவங்களைத் தடுக்க விரைவு நீதிமன்றங்கள் அமைத்தல் மற்றும் கடுமையான தண்டனைகளை உறுதி செய்யும் புதிய வரைவுச் சட்டம் குறித்து வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இரண்டாவது வாரத்திலேயே இந்த புதிய மசோதாவை நிறைவேற்ற அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் அவர் உறுதியளித்திருந்தார். இதனிடையே, நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசுகையில், இளைஞர்களுடன் ஆக்கப்பூர்வமான தொடர்பை வலுப்படுத்த இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளத் தளங்களில் மேலும் தீவிரமாகச் பயன்படுத்த, ரீல்ஸ் உள்ளிட்டவை மூலம் அரசின் திட்டங்களை அவர்களிடம் கொண்டு சேர்க்குமாறும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://www.instagram.com'eel/DbLyA8tIo7x/?igsh=MXA2aDY2c2VoOWZocA==
