News
பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் சென்னை காமராஜர் சாலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூபாய் 2.75 கோடியில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நீச்சல் குளத்தினை திறந்து வைத்தார்.
Published : Jul 23, 2026 06:29:55 PM - a week ago
மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் (23.07.2026) சென்னை காமராஜர் சாலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூபாய் 2.75 கோடியில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நீச்சல் குளத்தினை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலாளர் திரு. சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் திரு. ஜெ.மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ரெ.சுமன், பொது மேலாளர் திருமதி ல.சுஜாதா, செயற்பொறியாளர் திரு. புஷ்பலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
