News
தூத்துக்குடியில் விசாரணைக்காக போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Published : Jul 23, 2026 04:14:10 PM - a week ago
தூத்துக்குடியில் விசாரணைக்காக போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்தவர் அருணாச்சலம். கடந்த 17ம் தேதி காலையில் சட்டவிரோ மது விற்பனை தொடர்பான விசாரணைக்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அன்றைய தினம் மாலையே அவர் காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.கடந்த ஒருவாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து வந்த நிலையில், அருணாச்சலம் இன்று காலை உயிரிழந்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், போலீசார் அடித்துக் கொன்று விட்டதாக குற்றம்சாட்டுகின்றனர். ஏற்கனவே, கன்னியாகுமரியைச் சேர்ந்த சபரிவர்மன்,33, என்ற மாற்றுத்திறனாளி, குட்கா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு, நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது உயிரிழந்தார். அவரது உடலில் 19 காயங்களில் இருந்ததாக கூறப்படும் நிலையில், சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
