நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து போராடும் மாணவர்களைத் தாக்கி ஒடுக்கும் ஒன்றிய அரசின் எதேச்சதிகார நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்தும், திமுக கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Published : Jul 23, 2026 12:29:36 PM - 2 weeks ago
நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து போராடும் மாணவர்களைத் தாக்கி ஒடுக்கும் ஒன்றிய அரசின் எதேச்சதிகார நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்தும், திமுக கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தில் மாணவர்களுக்காக ஒலித்த தி.மு.கவின் உரிமைக்குரல்!
நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தியும், தங்கள் எதிர்கால நல்வாழ்விற்காக அறவழியில் போராடும் மாணவர்களைத் தாக்கி ஒடுக்கும் ஒன்றிய அரசின் எதேச்சதிகார நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்தும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திருமிகு.கனிமொழி எம்.பி. அவர்களின் தலைமையில் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் பிரதான வாசலில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் ஒழியும் வரை, மாணவர்களுக்கு விடிவில்லை!
நம் பிள்ளைகளின் மருத்துவ கல்வி கனவை சிதைக்கும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி, இன்று நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டபோது.