News
*🛡️பக்ரீத் பண்டிகை: டெல்லியில் மாடு, ஒட்டகம் குர்பானிக்குக் கடுமையான தடை! விதிகளை மீறினால் கிரிமினல் நடவடிக்கை - அமைச்சர் கபில் மிஸ்ரா எச்சரிக்கை!* * வரவிருக்கும் பக்ரீத் திருநாளை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரத்தைப் பேணிக் காக்கும் வகையில் டெல்லி அரசு அதிரடியான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. * டெல்லியில் பசு, கன்றுக்குட்டிகள், ஒட்டகங்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட விலங்குகளைக் குர்பானி கொடுப்பது முற்றிலும் சட்டவிரோதமானது என்றும், விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான கிரிமினல் நடவடிக்கை பாயும் என்றும் டெல்லி அரசு எச்சரித்துள்ளது. * மேலும், பொது இடங்களில் விலங்குகளைப் பலியிடுவதற்கும், வீதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் சட்டவிரோதமாக விலங்குச் சந்தைகளை அமைப்பதற்கும் முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Published : May 22, 2026 02:57:13 PM - 3 days ago