சோதனை, விசாரணை பெயரில் துன்புறுத்தக் கூடாது' செந்தில் பாலாஜி கோரிக்கையை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம்
Published : Jul 22, 2026 12:03:47 PM - a week ago
சோதனை, விசாரணை பெயரில் துன்புறுத்தக் கூடாது' செந்தில் பாலாஜி கோரிக்கையை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம்
சோதனை மற்றும் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் தங்களை துன்புறுத்தக் கூடாது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது முன்கூட்டியே பொதுவான பாதுகாப்பு உத்தரவு வழங்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சோதனை மற்றும் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் தங்களை துன்புறுத்தக் கூடாது என்றும் ஏதேனும் வழக்கில் விசாரணைக்கு அழைக்க வேண்டுமெனில் சட்டப்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரியிருந்தனர். ஆனால் இந்த நிலையில் அத்தகைய பொதுவான உத்தரவை வழங்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது
